அரிய புகைப்படங்கள்
(நன்றி: திரு. ரா.அ.பத்மநாபன் அவர்களின் 'சித்திர பாரதி')
பகுதி - 9
115. கலவை சங்கர செட்டியாரின் பெண் பத்மாவதியுடன் சகுந்தலா பாரதியும்
பாரதியின் பேத்தி விஜயா பாரதியும், புதுவை, 1957
116. 'தராசுக் கடை' என்று தராசு நூலில் விவரிக்கப்படும் மிகப் பழைய பெஞ்சு. புதுவை ஆறுமுகம் செட்டியார் வீட்டில் இன்றும் உள்ளது. படத்தில்: பாரதிதாசன், சகுந்தலா பாரதி, ரா.அ.பத்மநாபன், ரா.கனகலிங்கம், விஜயா பாரதி (புதுவை, 1957)
117. தேசீயத் தலைமைக் காரியாலயம்: திருவல்லிக்கேணி பேயாழ்வார் கோயில் தெருவில் மண்டயத்தார் வீடு, "கௌதமாசிரமம்". 1904-8 ல் பாரதி, வ.உ.சி. முதலிய தலைவர்கள் வெள்ளையனை விரட்டப் பல திட்டங்கள் உருவாக்கி நடத்திய இடம்.
118. 'குயில் சிவா' என்று பாரதியாரால் அழைக்கப் பெற்ற புதுவை நாடகாசிரியர் சிவக்கொழுந்து நாயகர்
119. இளம் பாரதியின் போஷகர்: கணேஷ் அண்டு கம்பெனி ஸ்தாபகர் எம்.ராமசேஷய்யர்
120. அச்சில் இல்லாத சில பழைய பாரதி நூல்கள்.
121. எட்டயபுரம் பாரதி மண்டபம்: 1954-ல் மண்டபத்தின் தோற்றம். மண்டபத்தைக் காட்டிய பாரதியின் மாமா சாம்பசிவய்யரையும் படத்தில் காணலாம்.
122. 1947-ல் எட்டயபுரம் பாரதி மண்ணடபத் திறப்பு விழா நடந்தபோது எடுத்த படம்.
123. 1947-ல் எட்டயபுரம் பாரதி மண்ணடபத் திறப்பு விழா நடந்தபோது கோலாகலமான அத் திருவிழாவில் தம்ழிநாடே குழுமியிருந்தது! மக்களும்தலைவர்களும் வேற்றுமையின்றிக் கலந்திருந்த அரிய காட்சியைப் படம் காட்டுகிறது
124. முதல்காட்சி, 1953 ஸெப்டம்பர், பாரதி விழா, சென்னை
125. 1954 ஸெப்டம்பர் ரதி தினம், சென்னை யூ.என்.ஐ.எஸ். அமெரிக்க நூல் நிலையத்தில்..
126. 1953-காங்கிரஸ் கண்காட்சியில், சென்னை
127. 1954 ஸெப்டம்பர் ரதி தினம், சென்னை யூ.என்.ஐ.எஸ். அமெரிக்க நூல் நிலையத்தில்..
128. முத1957 பாரதி தினம், புதுவை பாரதி விழா, பாரதி மன்றத்தில்
129. மேற்கண்ட அரிய புகைப்படங்கள் அனைத்தும் இடம்பெற்ற 'சித்திர பாரதி' என்ற ஆதார பூர்வமான பாரதி வரலாற்று நூலின் ஆசிரியர்,
பாரதி ஆய்வாளர் திரு. ரா.அ.பத்மநாபன் அவர்கள்
Website Designed by Bharathi Sangam, Thanjavur