அரிய
புகைப்படங்கள்
(நன்றி: திரு.
ரா.அ.பத்மநாபன் அவர்களின் 'சித்திர பாரதி') |
பகுதி - 7
|
|
83.
கவிஞரும் மனைவியாரும்: பாரதியும் மனைவி செல்லம்மாளும்.
1917-ல் விஜயராகவன் என்ற அன்பரின் தூண்டுதலின்பேரில்
எடுத்த புகைப் படம். புதுவையன்பர்கள் பாரதி தாடியுடன்
இருக்கும் இப்படத்தையே விரும்புகிறார்கள். |
|
84.
குடும்பமும் ஒரு நண்பர்களும்: 1917-ல் புதுவையில், முந்திய
படம் எடுத்த
அதே நாளில் எடுத்த மற்றொரு படம்.
உட்கார்ந்திருப்பவர்கள்: புதல்வி சுகுந்தலா(பாப்பா),
மனைவி செல்லம்மாள்.
நிற்பவர்கள்: புதல்வி தங்கம்மா, நண்பர் ராமு, நண்பர்
விஜயராகவன், பாரதி |
|
85.
செங்கோல் செலுத்தும் கவியரசன்: காரைக்குடி ஹிந்து மதாபிமான
சங்கத்தில் பாரதியும் இளம் நண்பர்களும் இடமிருந்து வலம்:
அ.மு.க.மு.க.கறுப்பன் செட்டியார், ராய.சொக்கலிங்கன்,
பாரதி, சொ.முருகப்பா, கி.நாராயணன் செட்டியார். பின்னால்:
மு.நடராசன்; சிறுவன் பெயர் தெரியவில்லை. |
|
|
86.
மிக இயற்கையான படம்: கவியரசரின் இயற்கையான பரபரப்புத்
தன்மையை அற்புதமாய்க் காட்டும புகைப்படம். இது 1920-ல்
தமது உற்ற நண்பர் பாரதிதாசனுக்காக கவிஞர் சென்னையில்
எடுத்துக்கொண்ட படம். மிகப் பிரபலமான பாரதி முகமும்
இதுவே |
87.
செங்கோல் செலுத்தும் கவியரசன் |
|
88.
கவிஞர் கடைசியாக இருந்த இல்லம்: பல நூற்றாண்டுகளுக்கு
முன் ஒரு முறை தோன்றும் மகா மேதை பொனுடல் நீத்துப் புகழுடல்
எய்திய திருவல்லிக்கேணி இல்லம். தெளிய சிங்கப் பெருமாள்
கோயில் தெருவில் உள்ளது |
பாரதி குடும்பத்தினர்
|
|
|
89.
யதுகிரி அம்மாள்: பாரதி இருந்த காலததில் அவருடைய அன்புக்குப்
பாத்திரமான சிறுமியாக இருந்த யதுகிரி அம்மாள். மண்டயம்
ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் புதல்வி. தாம் கண்ட பாரதியை
'பாரதி நினைவுகள்' என்ற சுவைமிக்க நூலாக எழுதியுள்ள
இவ்வம்மையார் 1954-ல் காலமானார். இப்படம் 1947-ல் எடுத்தது |
90.
மைத்துனர்: பாரதியின் மைத்துனர் (செல்லம்மாளின் தமையனார்)
க.ரா.அப்பாதுரை. தேசபத்தி கொண்டவர்; தேசீய நடவடிக்கைகளுக்காகவும்
பாரதிக்குத் துணை நின்றதற்காகவும் போஸ்ட் மாஸ்டர் வேலையிலிருந்து
நீக்கப் பெற்றவர்; ஜமீன்தார்கள் சகவாசம் உள்ளபடியால்
அலங்காரத் தலைப்பாகை கட்டும் பழக்கம் கொண்டவர் |
|
|
91.
தம்பியும் தங்கையும்: பாரதியின் தம்பி சி.விசுவநாதனும்
தங்கை லஷ்மி அம்மாளும் (சுமார் 1934-ல் எடுத்த படம்)
பாரதி பாடல்களை உணர்ச்சி, சங்கீதம் இரண்டும் சேர்த்துப்
பாடப் பழகியவர் விசுவநாதன். |
92.
மூத்த மாப்பிள்ளை ஸ்தாணு அய்யரும் மூத்த பெண் தங்கம்மாளும்
(1934) |
|
|
|
93. மாமா சாம்பசிவய்யர்
(1957) |
94.
புதல்வியர் இருவரும் (1922?) |
95.
புதல்வியர் இருவரும் (1922?) |
|
|
96.
தம்பி சி.விசுவநாதன் (1957) |
|
97.
மனைவி செல்லம்மாளும் இரு புதல்வியரும் பேரக் குழந்தைகளும்(1954) |