அரிய புகைப்படங்கள்
(நன்றி: திரு. ரா.அ.பத்மநாபன் அவர்களின் 'சித்திர பாரதி')
பகுதி - 6
68. 'சுதேசி' பத்மநாபய்யங்கார்:
1908-ல் வ.உ.சி., சிவா, நெல்லையப்பர் முதலியோருடன் சிறை தண்டனை விதிக்கப்பெற்ற திருநெல்வேலித் தலைவர். ஆங்கிலப் பத்திரிகை நடத்தி சுதேசி இயக்கத்தைப் பரப்பியவர்
69. பரலி சு.நெல்லையப்பர்: பாரதியின் நெருங்கிய நண்பர், 'இந்தியா'வில் வேலை பார்த்தவர், சிறந்த கவிஞர், 'லோகோபகாரி' பத்திராதிபர்.
(1939-ல் எடுத்தப் படம்)
70. காந்திஜீயும் ராஜாஜீயும்: பாரத விடுதலை இயக்கத்தின் அஸ்திவாரமும் அரணுமான இவ்விரு தலைவர்கள் 1919-ல் கூடிய சமயம் அவர்களுக்கு பாரதி வலிய ஆசீர்வதித்தார் (1945-ல் எடுத்தப் படம்)
71. விடுதலைக்கு உதவியவர்கள்: 1918 முடிவில் பாரதியை அரசாங்கம் விடுதலை செய்ய உதவிய பெருமக்களில் இருவர். 'மித்திரன்' ஆசிரியர் ரங்கஸ்வாமி அய்யங்கார், அரசியல் தலைவர் ஸி.பி.ராமஸ்வாமி அயயர்
(சுமார் 1936-ல் எடுத்தப் படம்)
72. இரு நண்பர்கள்: பாரதியின் ஆதிகால நண்பரும் தொழிலாளர் தலைவருமான வி.சக்கரை செட்டியாரும் (படத்தில் வலக்கோடி), நாவலர் ஸத்திய மூர்த்தியும்(இடக்கோடி), இவர்களுடன் ஆந்திரத் தலைவர் வி.வி.கிரியும் ஒரு தொழிலாளர் கூட்டத்தில் பேசுவதை இந்த 1936 படம் காட்டுகிறது
73. அன்னி பெஸண்ட்: அரசியலில் பாரதிக்கும் தமக்கும் வேற்றுமை இருந்தும் பாரதி விடுதலைக்கு உதவிய ஹோம் ரூல் இயக்கத் தலைவி அன்னி பெஸண்ட்
74. 'மித்திரன்' ஆசிரியர்:1920-ல் பாரதி மீண்டும் 'மித்திர'னில் சேர்ந்த சமயம் அதன் ஆசிரியராயிருந்த ஏ.சங்கஸ்வாமி அய்யங்கார். பாரதியை மிகவும் ஆதரித்தவர்
75. 'மித்திரன்' நிர்வாகி: பாரதி காலத்தில் 'மித்திரன்' நிர்வாகக் குழுவிலும், அதன் ஆசிரிய பீடத்திலும் இருந்த சி.ஆர்.ஸ்ரீநிவாஸன், வசனத்தில் பாரதியின் நேர் நடையைக் கைக்கொண்டவர்
76. மாடிப் படி: 'மித்திரன்' அலுவலகத்துக்குள் செல்லும் படி. முன்பு மரப்படியாக இருந்தது. பாரதி இரண்டு மூன்று படிகளைச் சேர்த்தே தாண்டுவாராம்
77. 'மித்திரன்' அலுவலகம் 1921: பாரதி காலத்தில் ஜார்ஜ் டவுனில் 'மித்திரன்' இருந்த கட்டடம். எரபாலு செட்டி தெருவும் ஸிங் கண்ண நாய்க்கன் தெரும் கூடுமிடம்
78. வி.பி.ஹால்: 'நித்திய வாழ்வு' என்ற பொருளில் பாரதியின் சொற்பொழிவு நடந்த சென்னை வி.பி.ஹால்
79. நீதிபதி மணி அய்யர்: 'நித்திய வாழ்வு' என்ற பொருளில் பாரதியின் சொற்பொழிவு நடந்த சென்னை வி.பி.ஹால் கூட்டத்துக்குத் தலைமை வகித்த நீதிபதி மணி அய்யர்
80. கி.சடகோபன்: திருவல்லிக்கேணியில் பாரதியின் கடைசி நாட்களில் அவரை நன்கறிந்தவர்
81. வி.ஹரிஹர சர்மா: புதுவை 'இந்தியா' பத்திரிகையின் உதவியாசிரியர், புரட்சி வீரர், காந்தி பக்தர், ஹிந்தி பிரசாரகர், பாரதி பிரசுராலயம் அமைத்து நடத்தியவர்களுள் ஒருவர்
82. ஆர்.சின்னசாமி: பாரதியின் கடைசிக் காலத்தில் அவரை நன்கு அறிந்திருந்த தேசபக்தர், அறிவாளி, ரசகர்
Website Designed by Bharathi Sangam, Thanjavur