அரிய
புகைப்படங்கள்
(நன்றி: திரு.
ரா.அ.பத்மநாபன் அவர்களின் 'சித்திர பாரதி') |
பகுதி - 5 |
|
59.
கவியின் மனதைக் கவர்ந்த மடு: பாரதியும் குவளைக் கண்ணனும்
தினந்தோறும் அதிகாலையில் ஸ்நானம் செய்யச் சென்றுவந்த
தியாகராஜ பிள்ளை மடு. இதற்குப் போகும் வழியில் பாடப்பட்டதே
பாரதமாதா திருப்பள்ளியெழுச்சிப் பாடல் |
|
60.
குயில் பாட்டுத் தோப்பு: புதுவை முத்தியாலுப் பேட்டைக்கருகே
உள்ள நிழல் நிறைந்ததொரு மாந்தோப்பு. பாரதி அடிக்கடி
பகல் பொழுதைக் கழித்த இடம். குயில் பாட்டில் குறிக்கப்
பெறும் தோப்பு இதுவே. தோப்புக்கப்பால் தெரிவதுதான்
'பிழைத்த தென்னந் தோப்பு' |
|
61.
தோப்புக்கு வெளியே: அழகான கழனிகள் நிறைந்த இக்காட்சி
கவியின் உள்ளத்தைக் கவர்ந்தது |
|
62.
புதுவைக் கடற்கரை: சென்னைக் கடற்கரையைவிட மிகச் சிறியதாயினும்,
புதுவைக் கடற்கரையும் மிக வசீகரமானதே. இப்படம், தற்சமயம்
உடைந்து மூடப்பட்டுள்ள இரும்புக் கடற் பாலத்திலிருந்து
எடுத்தது |
|
63.
தேசமுத்துமாரி கோயில்
- புதுவை |
|
|
64.
பாரதியால் பாடல் பெற்ற புதுவை மணக்குள விநாயகர் கோயில் |
65.
சித்தாந்தசாமி கோயில் மடம்: பாரதியால் பாடப் பெற்ற அமைதியானதோர்
மடம். ஊருக்கு வெளியே உள்ள இம் மடத்திலும் பாரதி பகல்
பொழுதைக் கழிப்பதுண்டு |
|
66.
கடயம் நித்திய கல்யாணி கோயில்: செல்லம்மாளின் ஊராகிய
கடயத்திலுள்ளது. வனப்பு மிக்க சூழ்நிலை கொண்டது. 'அன்னையே
நித்திய கல்யாணியே' என்று
பாரதியால் பாடப் பெற்ற அம்மன் |
|
67.
பாரதி இருந்த இல்லம்: கடயத்தில் பாரதி வசித்துவந்த வீடு.
அக்கிரகாரத்துக் கோடியில் ஒதுப்புறமாய் உள்ளது. தம்
சீர்திருத்தக் கருத்துகளினால்
அக்கிரகாரத்தில் வசிக்க முடியாமல் இவ் வீட்டுக்குக்
குடி மாறினார் கவிஞர் |