அரிய புகைப்படங்கள்
(நன்றி: திரு. ரா.அ.பத்மநாபன் அவர்கள் தொகுத்த 'சித்திர பாரதி')
பகுதி - 4
45. பாரதி சீடர்: வ.ரா.(பிற்காலப் படம்)
46. பாரதி சீடர்: 'பாரதிதாசன்'
47. உதவியாளர்: ஏழை நெசவாளி 'வெல்லச்சு' கிருஷ்ணஸ்வாமி செட்டியார். பாரதிக்குப் பல சமயம் பண உதவி அணித்தவர். இவரது குட்டையான தோற்றத்தினால் பாரதி இவரை 'வெல்லச்சு' என்றழைத்தார்
48. தொண்டர்: பாரதியையும் அரவிந்தரையும் இளமையிலேயே நன்கறிந்திருந்தவரும், அரவிந்தரின் சீடராக அரவிந்தாசிரமத்தில் இருந்தவருமான அமுதன்
49. ஆதரவளித்த சீமான்: பல வகைகளில் பாரதிக்கு ஆதரவளித்து வந்த சீமான் பொன்னு முருகேசம் பிள்ளையும் அவரது மனைவியார் அண்ணியம்மாளும்
50. தொண்டர்: பொன்னு முருகேசம் பிள்ளையின் மூத்த புதல்வர் ராஜா பகதூர் (1939-ல் எடுத்தப் படம்)
51. தொண்டர்: பொன்னு முருகேசம் பிள்ளையின் இளைய புதல்வர் கனகராஜா (1930-ல் எடுத்தப் படம்)
52. பாரதி பூஜித்த விக்கிரகமும் வாளும்: ஏழைப் பணிப் பெண் அம்மாக்கண்ணு வீட்டில் பாரதி பூஜித்ததாகச் சொல்லப்படும் தத்தாத்ரேய விக்கிரகமும் வாட்களும். அருகே நிற்பது அம்மாக்கண்ணுவின் மூத்தப் புதல்வர் வேணு என்ற வேணுகோபால் நாகயர். (1938-ல் எடுத்தப் படம்)
53. அம்மாக் கண்ணு: பாரதியிடமும் அவரது குடும்பத்தாரிடமும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த பணிப்பெண். (1938-ல் எடுத்தப் படம்). வ.ரா. இவ்வம்மையாரை மிகவும் போற்றியுள்ளார்
54. கோவிந்தன்: அம்மாக்கண்ணுவின் இளைய புதல்வர் கோவிந்தசாமி, பாரதியும் குடும்பத்தாரும் இட்ட வேலைகளைச் செய்து முடிப்பதில் சூரர்.
(1930-ல் எடுத்த படம்)
55. 'பிரம்ம ராய அய்யர்' என்று பாரதி அழைத்த புரொபஸர் சுப்பிரமணிய அய்யர். இவரைப் பற்றிப் பல பாரதி கட்டுரைகளில் குறிப்புகள் வருகின்றன
56. தயாளு: செல்வந்தரும் புதுவை தேச பக்தர்களில் உற்ற நண்பரும், அவர்களை ஆபத்தில் காத்தவருமான கலவை சங்கர செட்டியார்
57. சீடர்: பாரதியால் பூணூல் அணிவிக்கப் பெற்ற ஹரிஜனச் சீடர் ரா.கனகலிங்கம் (1953-ல் எடுத்தப் படம்)
58. உதவியளித்த செல்வந்தர்: பாரதி, வ.வே.ஸு.அய்யர், வ.ரா., ஆஷ் கொலை வழக்கு எதிரி மாடசாமி முதலியோருக்கு உதவியாயிருந்த செல்வந்தர் ஆறுமுகம் செட்டியார். (1939-ல் எடுத்தப் படம்) மாடசாமியைத் தம் வீட்டில் ஒன்றரை வருஷம் பரம ரகசியமாய் வைத்துக் காத்ததாக இவர் கூறினார்
Website Designed by Bharathi Sangam, Thanjavur