அரிய புகைப்படங்கள்
(நன்றி: திரு. ரா.அ.பத்மநாபன் அவர்களின் 'சித்திர பாரதி')
பகுதி - 3
31. குவளைக் கண்ணன்: முன்பின் பழக்கமில்லாத புதுவையில் நெருக்கடியான சமயத்தில் முதன் முதலாக பாரதியின் உதவிக்கு வந்தவரும், பிற்காலத்தில் திருவல்லிக்கேணியில் யானை காலடியில் கிடந்த பாரதியைக் காப்பாற்றியவருமான குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார். பாரதியார் பாடல்களில் மிகவும் போற்றப்பட்டவர். (1938-ல் எடுத்த படம்)
32. அறிவாளி: புதுவை அறிவாளிகளின் ஒருவரும் பாரதியின் நண்பருமான ஸ்வாமிநாத தீஷிதரும் புதல்வர்களும். படத்தில் வலமிருக்கும் மூத்த புதல்வர் வி.எஸ்.குஞ்சிதபாதம் தம் பாரதி நினைவுகளை 'சுதேசமித்திர'னில் விரிவாக எழுதியுள்ளார்
33. ஏழ்மையிலும் உதவியர்: குவளைக் கண்ணன் மூலம் பாரதியை அறிந்து, புதுவையில் ஆரம்ப நாட்கள் முதலே கவிஞருக்குப் பேருதவி செய்த சுந்ரேசய்யர். தொழிலில் மணிலாக் கொட்டை வர்த்தகக் கடையில் குமாஸ்தா. தமக்கு அதிக வருவாய் இல்லாதபோதும், தம்
மனைவியின் நகைகளை அடகுவத்துக்கூடப் பணம் உதவியவர்
34. புதுவை 'இந்தியா': புதுவை போன 'இந்தியா' முதல் வருஷம் சிறிய அளவில் வெளிவந்தது. இந்தியாவின் லட்சியம் ஸ்வராஜ்யம் என்ற உபதேசித்த தாதாபாய் நவுரோஜிகக 84 வயது பூர்த்தியாவதை முன்னிட்டு 1909 ஸெப்டம்பர் 4-ந் தேதி, புதுவை 'இந்தியா'வின் 47-வது இதழில் தாதாபாய் படம் வெளியாயிற்று
35. காந்திப் பசு: தென் ஆப்பிரிக்க இந்தியத் தலைவர் மோ.க.காந்தியை சத்தியமிக்க பசுவாச் சித்திரிக்கும் 'இந்தியா' கார்ட்டூன் 1908-ல் வெளியானது
36. 'விஜயா' என்ற சென்னை தீவிர தேசியத் தமிழ்த் தினசரி 7.9.1909 முதல் புதுவையிலிருந்து வெளியாகுமேன்று கூறும் விளம்பரம், 'இந்தியா' 4-9-1909 இதழில்
மற்றும் 'விஜயா' தலையங்கம்:வி.கிருஷ்ணஸ்வாமி ஐயர் நீதிபதிப் பதவியை ஏற்றதற்காக அவரை கண்டிக்கும் 'விஜயா' தலையங்கம். பாரதி 'விஜயா'வுக்கும் ஆசிரியப் பொறுப்பு வகித்து வந்தார்.
37. பாரதி இருந்த இல்லம்: 'புயற் காற்று' பாடலில் குறிக்கப்படுவது. 1938-ல் எடுத்த மேல் இடது படத்தில் உள்ளதுபோலவே 1953-ல் எடுத்த வலது படத்திலும் வீட்டுச் சுவர்கள் நலிந்து உப்புப் பூத்துக கொட்டுகிறது.
38. 'இந்தியா' அச்சகம்: புதுவை 'இந்தியா' அலுவலகமும் அச்சகமும் இச்சிறு கட்டடத்தில் இருந்தன. ஸரஸ்வதி அச்சகம் என்று அக் காலத்தில் பெயர். (இப்படம் 1939-ல் எடுத்தது)
39. பாரதி இருந்த பெரிய வீடு: முன் பக்கத்திலுள்ள வீட்டைக் காலி செய்தபின் பாரதி இருந்த பெரிய வீடு. 'சும்மா' என்ற கட்டுரையில் பாரதி விவரிக்கம் வீடு இதுதான். இவ்வீடு 'விளக்கெண்ணெய்ச் செட்டியார்' என்று பாரதி அழைத்த ஒரு செட்டியாருடையது. (1953-ல் எடுத்த படம்)
40. பாபு அரவிந்த கோஷ்: அரவிந்தர்,
1906-ல், அரசியல் தலைவராக இருந்தபோது. பாரதியின் யுக்தியைப் பின்பற்றிப் புதுவை வந்தவர் அரவிந்தர்
41. வீர விளக்கு வ.வே.ஸு. அய்யர்: ஸீக்கியர், மகம்மதியர் என்ற மாறு வேடங்களில் லண்டனிலிருந்து புதுவை வந்து சேர்ந்த தேசபக்த வீரர்
42. சுப்பிரமணிய சிவா: தமிழ்நாட்டில் தேச பக்தியை வளர்த்த பெரியார்களின் ஒருவரான சுப்பிரமணிய சிவா; இளமையில், தாடியின்றி, சிவா நடத்திய 'ஞான பாநு' பத்திரிகைக்கு பாரதி தொடர்ச்சியாக
விஷயதானம் செய்துவந்தார்
43. சுப்பிரமணிய சிவா: தாடியுடனும், தம்மிடம் எப்போதும் வைத்திருந்த பெரிய கைத் தடியுடனும். பாரதிக்கும் வ.உ.சி.க்கும் நெருங்கிய நண்பரும் தேசீய ஊழியருமான சிவா சுதேசி இயக்கத்திலும் பாரதி பாடல்களைப் பாடிப் பரப்புவதிலும் முக்கிய பங்கு கொண்டவர்
44. அரவிந்தர் புகலிடம்: புதுவைக்கு ரகசியமாய் வந்த அரவிந்தர் முதன் முதலில் கலவை சங்கர செட்டியார் வீட்டு மாடியில் தங்கியிருந்தார்
Website Designed by Bharathi Sangam, Thanjavur