அரிய புகைப்படங்கள்
(நன்றி: திரு. ரா.அ.பத்மநாபன் அவர்களின் 'சித்திர பாரதி')
பகுதி - 2
19. 'இந்தியா' ஸ்தாபகர் மண்டயம் நா.திருமலாச்சாரியார். தேசபக்தி மிக்க பத்திரிகை நடத்த விரும்பிய இவருக்கு பாரதி தக்க ஆசிரியராக வந்துசேர்ந்தார்
20. மண்டயம் ஸ்ரீநீவாஸாச் சாரியார்: 'இந்தியா'வை ஆரம்பித்து நடத்திய குடும்பத்தைச் சேர்ந்த இவர் பாரதியிடன் தாமும் புதுவையில் குடியேறினார்(1896-ல் எடுத்தப் படம்)
21. கலவரத்திற்கு முன்
22. கலவரத்திற்கு பின்
23. சூரத் காங்கிரஸ்: போய் வந்ததும் பாரதி வெளியிட்ட சிறு பிரசுரத்தின் மேலட்டையும் முதல் பக்கமும்
24. வி.கிருஷ்ணசாமி ஐயர்: தம் அரசியல் எதிரி பாரதியின் தேசபத்திப் பாடல்களில் சொக்கிப்போய் அவைகளை முதலில் அச்சிட்டு இலவசமாய்ப் பரப்பிய வள்ளல்
25. கப்பலோட்டிய தமிழர்: சிறந்த தேசபக்தரும் பாரதியின் நண்பரும் தீவிரவாதிகள் தலைவரும் பாரதி உதவி கொண்டு சுதேசிக் கப்பல் கம்பெனி நிறுவியவருமான வ.உ.சிதம்பரம் பிள்ளை
26. 'இந்தியா' அலுவலகம்: சென்னை பிராட்வேயில் 34-ம் எண் இல்லம். இங்குள்ள படியில் பாரதி இறங்கி வரும்போதுதான் 'வாரண்டு'டன் வந்த போலீஸ்காரனைச் சந்தித்தார்
27. பாரதி வெளியிட்ட சிறு நூல்: சூரத் காங்கிரஸ் சென்று திரும்பியபின் திலகர் கட்சியின் கொள்கைகளைப் பரப்ப பாரதி 1908-ல் வெளியிட்ட மற்றொரு பிரசுரத்தின்
முகப்புப் பக்கமும் முதல் பக்கமும்
28. கடற்கரைக் கூட்டம்: சென்னை திலகர் கூட்டத்தில் ஒரு கூட்டம். இப்படம் பிற்காலத்தில் எடுக்கப்பெற்றதாயினும், பாரதி காலக் கூட்டங்களும் நேகமாய் இப்படியேதான் இருந்தன
29. புகழ் பெற்ற குடும்பம்: பாரதியை ஆதரித்த மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரும் (வலக்கோடி) குடும்பத்தினரும். இடமிருந்து வலம்: பார்த்தஸாரதி (இளைய சகோதரர்), கிருஷ்ணமாச்சாரியார்(தந்தை,தேசபக்தி மிகுந்தவர், 1890-91-ல் புதுவையில் 'இந்தியன் ரிபப்ளிக்' என்ற பத்திரிகை ஆரம்பித்தவர்), எஸ்.திருமலாச்சாரியார் (மூத்த சகோதரர், 'விஜயா' ஸ்தாபகர்), ஸ்ரீநிவாஸாச்சாரியார். (1897-ல் எடுத்த படம்)
30. சுரேந்திரநாத் ஆரியா: பாரதியின் ஆதிகாலத் தோழர், வன்மை மிக்க பிரசங்கி, தீவிரவாதத் தலைவர். இவரது முழுப் பெயர்: எஸ்.பி.யதிராஜ் சுரேந்திரநாத் வோகவி ஆரியா (சுமார் 1929-ல் எடுத்த படம்)
Website Designed by Bharathi Sangam, Thanjavur