மகாகவி பாரதியாரின் கடிதங்கள்

சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி ஐயங்காருக்கு
நன்றிக் கடிதம், 1918

ஓம் சக்தி

கடையம்,
டிசம்பர் 17

ஸ்ரீமான் ரங்கசாமி அய்யங்காருக்கு நமஸ்காரம். ஞாயிற்றுக் கிழமை (15ந் தேதி) இரவு நான் இவ்வூருக்கு வந்து சேர்ந்தேன். என் விடுதலையின் பொருட்டாகத் தாங்களும் மற்ற நண்பர்களும் மிகவும் சிரத்தையுடன் பாடுபட்டதற்கு என் மனப்பூர்வமான நன்றி தெரிவிக்கிறேன்.

ஸ்ரீமதி அனி பெஸண்ட், ஸ்ரீ மணி அய்யர், ஸ்ரீ சி.பி.ராமசாமி அயயர் முதலாக என் விடுதலை விஷயத்தில் சிரத்தையெடுத்துக் கொண்ட தங்களுடைய மித்திரர்களுக்கெல்லாம் எனது நன்றி தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.

தங்களன்புள்ள,
சி.சுப்பிரமணிய பாரதி


Website Designed by Bharathi Sangam, Thanjavur