மகாகவி பாரதியாரின்
கட்டுரைகள்
After all!
ஒரு மட்டில் நமது மனோரதம் நெருங்கிவிட்டது
(சி.சுப்பிரமணிய
பாரதி)
கீழ் பெங்காளத்து
கவர்னராகிய ஸர்.பி.புல்லர் ராஜினாமா கொடுத்துவிடப் போகிறா
ரென்ற சமாசாரம் கடைசியாக இத் தேசத்தாரெல்லாம் மனது குளிரும்படியாக
வெளியேறிவிட்டது.
ராஜினாமா கொடுத்தாய் விட்டதென்றும், அதை வைசிராய் அங்கீகரித்துக்
கொண்டு விட்டாரென்றும் சிலர் பிரஸ்தாபித்தார்கள். ஆனால்,
ஸிம்லாவிலிருந்து வந்திருக்கும் பிரஸ்தாபங்களைக் கவனிக்கும்போது,
'இது உறுதியாய் விட்ட'தென்று புலப்படவில்லை. இதனிடையே பெங்காளிகள்
ஸர்.பி.புல்லர் தொலைந்து விட்டதாகவே நிச்சயித்துக் கொண்டு
பேரானந்தங்கொண்டாடத் தொடங்கி விட்டார்கள். இதெல்லாம் எவ்வாறிருந்த
போதிலும் கூடிய சீக்கிரம் புல்லர் கிளம்பி விடுவாரென்றே
அனேக அடையாளங்களால் தெரிகிறது. 'வெள்ளை'ப் பத்திரிகைகள்
கூட மேற்படி வதந்தியை மறுக்காமல் பிரசுரித்திருக்கின்றன.
மகா கனம் பொருந்திய ஸர்.பி.புல்லர் கான் நவாப் ஸாஹிப் அவர்கள்
க்ஷேமமாக வீடு போய்ச் சேரும்படி நாம் அவருக்கு முழு மனதுடன்
விடை கொடுத்தனுப்புகிறோம்.
(நாம் மேற்கண்ட விஷயத்தை அச்சிற்கனுப்பிய பிறகு ஸர்.பி.புல்லரின்
ராஜினாமா மறுக்கப்படுவதாக ஓர் தந்தி கிடைத்திருக்கிறது)
இந்தியா
- 28.07.1906