மகாகவி பாரதியாரின்
கட்டுரைகள்
The
Death of Lady Curzon
லேடி கர்ஸனது மரணம்
(சி.சுப்பிரமணிய
பாரதி)
லார்டு கர்ஸனது
மனைவி இறந்துபோய் விட்ட சமாசாராம் கேள்வியுற்றவுடனே இத்
தேசத்தில் அனேகர் மிகுந்த பரிதாபமடைந்திருப்பார்கள்.
செல்வம், அழகு, இளமை, உர்பதவி என்ற நான்கும் ஒருங்கே சேர்ந்திருப்பவர்களின்
மீது உலகத்தாருக்கு ஒருவிதமான அபிமானம் இயற்கையாகவே ஜனித்து
வருகின்றது.
இந்த மாது அமெரிகாவிலே மிஷ்ர் லெய்டர் என்ற கோடீஸ்வரர் வயிற்றிலே
பிறந்து 11 வருஷங்களுக்க முன்பு லார்ட் கர்ஸனை மணம் புரிந்துகொண்டு
மிகவும் பெருமையான வாழ்க்கை புரிந்து வந்தனள்.
டில்லி தர்பார் சமயத்திலே இவள் எய்தி நின்ற சிறப்பை நோக்கியபோது,
இந்திராணியின் சிறப்பென்று சொல்லும்படியாக இருந்தது. இது
மட்டுமன்றி லேடி கர்ஸன் உண்மையாகவே எல்லோர் மீதும் மிகுந்த
அன்பும் அனுதாபமு முயைவள்.
முக்கியமாக இத் தேசத்தில் ஆங்கிலேயர்களுக்கு அம் மாதினிடமிருந்த
அன்பும் மதிப்பும் அளவிடத்தக்கனவல்ல.
இந்தச் சமயத்தில் லார்டு கர்ஸனும், அவரது மூன்று குழந்தைகளும்
அடையக்கூடிய துக்கத்தை நினைக்கும்போது எவரும் பரிதாப மடையக்கூடும்.
இந்தியா
- 21.07.1906